1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 16 மே 2025 (09:11 IST)

கோலியுடன் ஒரே அணியில் விளையாட ஆசைப்பட்டேன்… டேவிட் வார்னர் உருக்கம்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும், ஏராளமான ரசிகர்களையும் கொண்டவராக இருப்பவர் விராட் கோலி. ரசிகர்களால் ‘கிங்’ கோலி என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை விளையாட்டுகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.

சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. எதிர்பார்த்தது போலவே இன்று அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ள்ளது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஏனென்றால் அவருக்கு இருக்கும் உடல்தகுதிக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கலாம்.

இந்நிலையில் கோலி பற்றி பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் “கோலியுடன் இணைந்து ஒரே அணியில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அதுக் கடைசி வரை நடக்கவில்லை. அவருடன் ஒரே அணியில் விளையாடிருந்தால் அவரது முழு ஆற்றலையும், ஆர்வத்தையும் களத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.  அது எனது நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாகிவிட்டது” எனக் கூறியுள்ளார்.