ஓரினச் சேர்க்கைக்கு அழைதவரை கொலை செய்த நண்பர்
திருப்பூரில் தனிப்பட்ட வீடியோவை மனைவியிடம் காட்டிவிடுவதாக மிரட்டி ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த நண்பரை இளைஞர் ஒருவர் அம்மிக்கல்லால் தாக்கிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூா், சாமுண்டிபுரத்தில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் சின்ராம் (20). இவரது நண்பா் முத்து (28). மதுரையைச் சேர்ந்த இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்தபோது ஓரினச் சோ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனா். இதில் முத்து திருமணத்திற்கு பின் தனது மனைவியுடன் தனியாக அறை எடுத்து தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முத்துவை சின்ராம் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதாகவும், அது தொடர்பான தனிப்பட்ட வீடியோ ஒன்றை முத்துவின் மனைவியிடம் காட்டிவிடுவதாகக் கூறி மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முத்து, சின்ராமை அம்மிக்கல்லால் தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்த சின்ராம் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்துக்குப் பின்னர் முத்து அங்கிருந்து தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முத்துவை தேடி வருகின்றனர்.
கொலைக்கான முழுமையான பின்னணி மற்றும் சம்பவத்தின் துல்லியமான காரணம் போலீஸ் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.

