உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தில் மேலும் சில வசதிகள் பயனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல புதிய வசதிகளை கொண்டு வரும் நிலையில், தற்போது வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக, பயனர்கள் எக்ஸ் தளத்திலும் சேட் செய்யும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது. அதுமட்டுமின்றி, வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியும் உள்ளது என்பதும், ஃபைல்களைப் பகிரும் வசதியும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க வாட்ஸ்அப் போலவே எக்ஸ் தளம் மாறி உள்ளதை அடுத்து வாட்ஸ்அப் பயனர்கள் பலர் எக்ஸ் தளத்திற்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதிகள் தற்போது ஐஓஎஸ் மற்றும் வெப் பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் ஆகியுள்ள நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Edited by Mahendran