திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2024 (12:50 IST)

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!

தமிழர்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அவர்களிடமே திரும்பி தரப்படும் என சமீபத்தில் இலங்கை அதிபராக பதவி ஏற்ற அனுர குமார திசநாயக தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார் என்பதும், அவரது வெற்றிக்கு தமிழர்கள் வாக்கு மிகவும் முக்கியமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை அரசால் தமிழர்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், இலங்கை கடல்பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் பாரபட்சம் இருக்காது என்றும் அவர் கூறினார்.

மேலும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் போர் சமயத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Edited by Siva