வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (13:37 IST)

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல்.. நாளை நேரடி விவாதம்..!

Kamala Harris
அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். நாளை இருவரும் நேரடியாக விவாதம் நடக்க இருக்கும் நிலையில் இந்த நேரடி விவாதம் உலகம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரச்சாரம் இருதரப்பிலும் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு ஆதரவாக உருவான ஆர்.ஆர்.ஆர்  திரைப்படத்தில் இடம் பெற்ற ஆஸ்கார் விருது பெற்ற  ’நாட்டு நாட்டு’ என்ற பாடலின் இந்தி பதிப்பு பிரச்சார பாடலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கான வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை ஜனநாயக கட்சியின் ஆசிய அமெரிக்க கூட்டமைப்பின் தலைவரான அஜய் புடோரியா வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை பெரும் வகையில் இந்த பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran