1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 மே 2025 (10:24 IST)

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வி.. இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது..!

அமெரிக்க பணவர்த்தகர் எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒன்பதாவது முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக எரிபொருள் கசிவே காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
இது முதல் முறையல்ல. இதற்கு முந்தைய ஏழாவது (ஜனவரி மாதம்) மற்றும் எட்டாவது (மார்ச் 6) முயற்சிகளும் வெற்றியடையவில்லை.  
 
இந்த தொடர்ச்சியான தோல்விகள் ஸ்பேஸ்எக்ஸின் முன்னெச்சரிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Mahendran