வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 25 ஜூன் 2025 (13:02 IST)

3 இஸ்ரேலியர்களுக்கு மரண தண்டனை.. இன்று தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றிய ஈரான்..!

3 இஸ்ரேலியர்களுக்கு மரண தண்டனை.. இன்று தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றிய ஈரான்..!
ஈரானில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று உளவாளிகளுக்கு, ஈரானிய நீதிமன்றம் மரண தண்டனை அளித்த நிலையில், அந்தத்தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாகப் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போதுதான் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. 
 
இந்தச் சூழலில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு, ஈரானிய நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டதாகவும், மூவரையும் ஈரான் அதிகாரிகள் தூக்கில் இட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஏற்கனவே மூன்று பேருக்கு மரண தண்டனை சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது இந்தப்பதட்டமான சூழலில் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. 
 
தூக்கில் இடப்பட்ட ஆசாத் ஷோஜாய், எட்ரிஸ் ஆலி மற்றும் ரசூல் அகமது ஆகியோரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran