சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!
பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிகாலை தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவுக்கு ஒரு நாடு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதும், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்பட ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பாகிஸ்தான் நட்பு நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகள் உள்பட எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
சீனாவும், “நாங்கள் தீவிரவாதத்திற்கு எந்தவிதமான ஆதரவும் தரமாட்டோம்” என தெளிவாக தெரிவித்துள்ளது. அரபு நாடுகள் உள்பட எந்த முஸ்லிம் நாடும் பாகிஸ்தானுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிக்கவில்லை என்பதும் முக்கியமான அம்சமாகும்.
இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் பங்குச்சந்தை சுமார் 6200 புள்ளிகள் குறைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்ததன் காரணமாக, தற்போது பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்த ஒரு நாடும் அந்நாட்டிற்கு ஆதரவு அளிக்காத நிலை உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva