திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (10:09 IST)

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி! இஸ்ரேல் கை ஓங்குகிறதா?

isrel- Palestine
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 11 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் இரு தரப்புக்கும் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒசாமா அல் மசினி என்பவர் இஸ்ரேல் உள்பட வெளிநாட்டு பணயக் கைதிகளை கையாளுதல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இன்று இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் அரசியல் பிரிவு முக்கிய தலைவர் அல் மசினி பலியாகி உள்ளார் என்று உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஹமாஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் இஸ்ரேல் ஓங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran