நேபாளத்தில் தொடர் போராட்டம்.. பிரபலங்களின் வீடுகள் தீவைப்பு.. முன்னாள் பிரதமர் மனைவி மரணம்
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடந்த சமீபத்திய போராட்டங்களின்போது, முன்னாள் பிரதமர் ஜலநாத் கனால்-இன் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த துயர சம்பவத்தில், வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார், தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.
நேபாளத்தில் நிலவிவரும் அரசியல் பதற்றத்தின் உச்சகட்டமாக, போராட்டக்காரர்கள் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், டல்லு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ஜலநாத் கனாலின் வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டது. இந்த தாக்குதலின்போது, வீட்டிற்குள் ராஜ்யலட்சுமி சித்ரகார் சிக்கிக்கொண்டார். போராட்டக்காரர்களின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளால், அவரை காப்பாற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யலட்சுமி சித்ரகாரின் மரணம், நேபாளத்தின் அமைதிக்கு ஒரு கருப்பு புள்ளியாக அமைந்துள்ளது. இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுக்க, உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Edited by Mahendran