திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (17:03 IST)

உடற்பயிற்சி வீடியோக்கள் மூலம் பிரபலமான வீராங்கனை தற்கொலை!

America
அமெரிக்காவில் ராணுவ வீராங்கனை  மிச்செல்  யங்க் தனது மகள் பிறந்த நாள் கொண்டாடிய சில நாட்களில் மிச்செல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. 

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்த வீராங்கனை மிச்சேல் யங்க்(43). இவர் தான் உடற்பயிற்சி செய்வதை வீடியோவாக எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
 
இது பார்வையாளர்களை கவர்ந்திழுக்கவே இவருக்கு பாலோயர்ஸ் அதிகரித்து மக்களிடம் பிரபலமானார்.

இவருக்கு கிரேசி(12 வயது) என்ற மகள் உள்ளார். சமீபத்தில் கிரேசிக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோவையும் அவர் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தனது மகள் பிறந்தநாள் கொண்டாடிய சில நாட்களில் மிச்செல் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.