அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு பின்னர் ஆசிய நாடுகளுக்கு முதல்முறையாக ட்ரம்ப் இன்று பயணத்தை தொடங்கும் நிலையில் இது மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப் பிற நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார். இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரிகள் உயர்ந்துள்ள நிலையில், சில நாடுகளுக்கு வரிகள் குறைந்தும் உள்ளன. இந்நிலையில் வரிவிதிப்பிற்கு பிறகு இன்று ஆசிய பயணம் மேற்கொள்ளும் ட்ரம்ப் 5 ஆசிய நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
இன்று மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக கோலாலம்பூர் சென்றுள்ளார் ட்ரம்ப். அங்கு 3 நாட்கள் மாநாட்டில் கலந்துக் கொள்ளும் அவர் கம்போடியா - தாய்லாந்து எல்லை பிரச்சினை தொடர்பான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
பின்னர் ஜப்பான் செல்லும் ட்ரம்ப் அங்கு ஜப்பானிய பிரதமர் சனே தகச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பிராந்திட பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துக் கொள்கிறார். அந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தை சீனா - அமெரிக்கா இடையேயான முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாய்ப்பிருந்தால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னையும் சந்திப்பேன் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K