திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2024 (09:43 IST)

மைக்கேல் ஜாக்சன் பயோபிக் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

இருக்கும்போதும் இறந்த போதும் பல சாதனைகளையும் மர்மங்களையும் விட்டுச் சென்ற பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு மூன்றாவது முறையாக திரைப்படமாக உருவாகி வருகிறது. மைக்கேல் ஜாக்சன் மேல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டது. கருப்பு நிறத்தை வெள்ளை நிறமாக மாற அறுவை சிகிச்சை செய்துகொண்டது பல சர்ச்சைகள் உள்ள நிலையில் அவற்றுக்கெல்லாம் பதில் இந்த படத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சனாக அவரின் அண்ணன் மகன் ஜாஃபர் ஜாக்சன் நடிக்கிறார். இந்த படத்துக்கு மைக்கேல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டிரைனிங் டே உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஆண்டாய்ன் புஃகா இந்த படத்தை இயக்க ‘கிளாடியேட்டர்’ புகழ் ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த மைக்கேல் திரைப்படம் இப்போது அக்டோபர் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.