புதன், 5 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 நவம்பர் 2025 (07:08 IST)

சம்பளத்தைக் கொஞ்சம் கம்மியாக வாங்குங்கள்.. சக நடிகர்களுக்கு விஷ்ணு விஷால் கோரிக்கை!

சம்பளத்தைக் கொஞ்சம் கம்மியாக வாங்குங்கள்.. சக நடிகர்களுக்கு விஷ்ணு விஷால் கோரிக்கை!
நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ‘ராட்சசன்’ படத்திற்குப் பிறகு, விஷ்ணு விஷால் இந்த படத்தில் மீண்டும் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படம், ஒரு கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழில் ரிலீஸாகும் அதே நாளில் தெலுங்கிலும் ரிலீஸாக இருந்தது. ஆனால் இந்த வாரம் ரவி தேஜாவின் ‘மாஸ் ஜாதரா’ படமும்  பாகுபலி ரி ரிலீஸும் வர உள்ளதால் ஒரு வாரம் கழித்து நவம்பர் 7 ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸாகும் என அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷாலிடம் பத்திரிக்கையாளர்கள் ’தொடர்ந்து ஹிட் கொடுக்கும் தயாரிப்பாளராக உள்ளீர்கள். இப்போதுள்ள தயாரிப்பாளர்களுக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “தயாரிப்பாளர்களுக்கு அட்வைஸ் சொல்லும் அளவுக்கு வளரவில்லை. ஆனால் ஹீரோக்களுக்கு ஒரு பரிந்துரை சொல்வேன். சம்பளத்தைக் கொஞ்சம் கம்மியாக வாங்குங்கள். அப்போதுதான் படத்தின் உருவாக்கத்துக்குத் தேவையான செலவை செய்ய முடியும்” எனக் கூறியுள்ளார்.