வியாழன், 2 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (11:09 IST)

யார் இந்த கட்டப்பா?... ‘ஸ்பின் ஆஃப்’ திரைக்கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத்!

யார் இந்த கட்டப்பா?... ‘ஸ்பின் ஆஃப்’ திரைக்கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத்!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் தங்கள் எல்லைத் தாண்டி பேன் இந்தியா அளவுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு படங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால் பேன் இந்தியா சினிமா என்ற புதிய வகையினமே உருவாகியுள்ளது.

இந்நிலையில் பாகுபலி படத்தின் முதல் பாகம் ரிலீஸாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக ரி ரிலீஸ் செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் ‘பாகுபலி-The epic” என்ற பெயரில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக எஸ் எஸ் ராஜமௌலி அறிவித்துள்ளார்.

பாகுபலி முதல் பாகத்தின் முடிவில் கட்டப்பா, மகேந்திர பாகுபலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவார். பாகுபலிக்கு விஸ்வாசமான கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியோடு முதல் பாகம் நிறைவடையும். ஆனால் அது இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை இரண்டாம் பாகத்தை எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக்கியது. அந்த அளவுக்கு கட்டப்பா கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் பதிந்த ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் பாகுபலி படத்தின் கதையை எழுதிய ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் , தற்போது கட்டப்பாவை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு அந்த கதாபாத்திரத்தின் பின்னணியில் ஒரு திரைக்கதையை எழுதி வருகிறாராம். அவன் எங்கிருந்து வந்து பாகுபலி குடும்பத்தோடு இணைந்தான் என்பதை மையமாகக் கொண்ட திரைக்கதையாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.