விஜய் சேதுபதி & மிஷ்கினின் ‘டிரெய்ன்’ படத்தின் ரிலீஸுக்குத் தேதி குறிச்சாச்சு!
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார்.
மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு டிடெக்டிவ்வாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தும் இன்னும் ஓடிடி மற்றும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இம்மாதம் 28 ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகளைத் தயாரிப்புத் தரப்பு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.