வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 30 நவம்பர் 2024 (09:51 IST)

LIK படத்தில் சிவகார்த்திகேயன்தான் நடித்திருக்கணும்… விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் சிங்கப்பூரில் அடுத்தடுத்து நடந்தது. ஆனால் சில காரணங்களால் கடந்த சில மாதங்களாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சண்டிகாரில் தொடங்கி நடந்தது. இந்த படத்துக்கு LIK (Love insurance company) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் “தீமா” வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் “2018 ஆம் ஆண்டு இந்த கதையை சிவகார்த்திகேயனை வைத்து இயக்க இருந்தேன். படத்தின் கதை எதிர்காலத்தில் நடப்பது போல இருந்தது. அதனால் பட்ஜெட் அதிகமானது. இதனால் தயாரிப்பாளர் என்னிடம் அதை நிகழ்காலத்திலேயே வைத்து பண்ண முடியுமா எனக் கேட்டார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் அந்த படம் அப்போது நடக்கவில்லை. இப்போது அதனால்தான் நானே எனது சொந்த பேனரில் தயாரிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.