திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 20 மே 2023 (07:24 IST)

லைகா நிறுவனத்தில் ரெய்ட்… மேலும் தள்ளிப் போகும் விடா முயற்சி?

துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. மே 1 ஆம் தேதி விடா முயற்சி என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த டைட்டில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருசேர எதிர்கொண்டது.

இந்நிலையில் திரைக்கதை வேலைகள் முடிந்த நிலையில் இப்போது படத்துக்கான லொக்கேஷன் தேடுதல் மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு உள்ளிட்ட்ட பணிகளில் இயக்குனர் மகிழ் திருமேனி இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திடீரென லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்ட் நடத்திய நிலையில் சில பொருளாதார சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும், அதனால் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் எனவும் சொல்லபப்டுகிறது.