கொஞ்சம் விட்டுருந்தா கவின காலிபண்ணியிருப்பாரு! காப்பாற்றிய வெற்றிமாறன்
நேற்று கவின் நடித்துள்ள மாஸ்க் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. ஒரு ஹெஸ்ட் திரில்லர் பின்னணியில் உருவான இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்ரமன் ஆனந்த் இயக்கியிருக்கிறார். வெற்றிமாறன் மேற்பார்வையில் விக்ரமன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் கவின் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ருகானி சர்மா இந்த படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். ஆண்ட்ரியா இந்த படத்தில் ஒரு பவர்ஃபுல் வில்லியாக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் இந்த படத்தில் இறங்கி வேலை செய்து இருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கவின் ,ஆண்ட்ரியா இவர்களுடன் பால சரவணன் விஜே அர்ச்சனா மற்றும் சார்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
ஒரு சமூக அரசியலை பேசும் படமாகவும் இது இருக்கும் என்று தெரிகிறது. படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது கவின் தன்னுடைய குழுக்களுடன் இணைந்து ஒரு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றம் செய்கிறார். அதுவும் பிரபல பழம்பெரும் நடிகரான எம் ஆர் ராதாவின் முகமூடி அணிந்தவாறு அந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுகிறார் கவின். ஏன் அப்படி செய்கிறார் அதன் பின்னணியில் என்ன என்பது பற்றி தான் இந்த படம் பேசப்போகிறது.
கவின் இந்த படத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தில் ஒரு சாதாரண மனிதனாகவும் ஆண்ட்ரியா ஒரு ரிச்சான பவர்ஃபுல்லான ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நெல்சன் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். இந்த படத்தின் கதை பற்றி அவ்வப்பொழுது கவினும் நெல்சனும் பேசிக் கொண்டிருப்பார்களாம்.
முதலில் கதை கேட்கும் பொழுது நெல்சனுக்கு கவினின் கதாபாத்திரம் மிகவும் கிரேவாக இருந்ததாம். அதாவது இந்த கதையை அப்படியே விட்டிருந்தால் கவினை காலி செய்திருப்பார் விக்ரமன். ஏதோ கவினுக்கு பிடிக்காதவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது கவினின் கேரக்டர். அதன் பிறகு வெற்றிமாறன் இந்த கதையை ஆராய்ந்து சில பல திருத்தங்கள் செய்து மூன்றாவது முறை கதையை கேட்கும் பொழுது அந்த கிரே எல்லாம் மாறி ஃபிரஷ் ஆக இருந்தது என நெல்சன் அந்த விழா மேடையில் கூறினார்.