செவ்வாய், 17 ஜூன் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 17 ஜூன் 2025 (08:36 IST)

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் ப்ரோமோ ஷூட்… நெல்சன், கவின் சிறப்புத் தோற்றமா?

சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணைய இருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வெற்றிமாறனின் நீண்டகால படமாக்கல் பாணியால் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதமே தொடங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று சென்னை எழும்பூரில் வெற்றிமாறன் சிம்பு படத்துக்கான ப்ரோமோ வீடியோ ஒன்றை ஷூட் செய்துள்ளார். அதில் சிம்பு புதிய கெட்டப்பில் காணப்படுகிறார். மேலும் இந்த ஷூட்டில் இயக்குனர் நெல்சன் மற்றும் கவின் ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமானப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.