1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 ஜூன் 2025 (15:23 IST)

சிம்பு படத்துக்காக தனுஷிடம் NOC வாங்கும் வெற்றிமாறன்… அப்ப வடசென்னை தானா?

சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணைய இருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வெற்றிமாறனின் நீண்டகால படமாக்கல் பாணியால் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதமே தொடங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் ‘வடசென்னை ‘ படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இந்த படத்துக்கான ப்ரமோஷன் ஷூட் ஒன்று நடத்தப்பட்டது. இதற்கிடையில் இந்த படத்துக்காக வடசென்னை படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் தடையில்லாச் சான்றிதழ் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வடசென்னை படத்துக்கும் இந்த படத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.