1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 28 ஏப்ரல் 2025 (08:18 IST)

நான் படத்துக்காகதான் அதை செய்தேன்… நீங்கள் யாரும் அதை செய்யாதீர்கள்.. சூர்யா கோரிக்கை!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சூர்யா “நான் ரெட்ரோ படத்துக்காக சிகரெட் புகைக்கும் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் உங்கள் வாழ்க்கையில் தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். ஒரு தடவைதானே என்று ஆரம்பித்தால் கூட அதை எளிதில் விட முடியாது. அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவீர்கள்.  புகைப்பழக்கத்தை என்றுமே நான் ஆதரிக்க மாட்டேன்.” எனக் கூறியுள்ளார்.