1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 மே 2025 (09:15 IST)

ஓடிடியில் வெளியானது சுந்தர் சி & வடிவேலு காம்போவின் ‘கேங்கர்ஸ்’!

’கேங்கர்ஸ்’ படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தது.  இதனால் இந்த படத்தின் மீது சினிமா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் வடிவேலு பழைய நகைச்சுவை மன்னனாக கம்பேக் கொடுப்பார் என டிரைலர் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் படம் ரிலீஸான நிலையில் வழக்கம் போல பெரிய அளவில் நேர்மறையான விமர்சனம் கிடைக்கவில்லை. ஆனால் சுந்தர் சி படங்களுக்கு என்றுதான் நல்ல விமர்சனம் வந்துள்ளது?. ரசிகர்கள் மத கஜ ராஜா படத்தை எல்லாம் பார்த்துக் கொண்டாடவில்லையா?. அந்த வகையில் இந்த படத்துக்கு முதல் நாள் வசூல் கணிசமாக இருந்துள்ளது.  ஆனாலும் அடுத்தடுத்த நாட்களில் படம் பெரியளவில் பிக்கப் ஆகவில்லை.

இதனால் மிகப்பெரிய கலெக்‌ஷனைக் குறிவைத்துக் களமிறங்கிய ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் திரையரங்க ரீதியாக ஒரு தோல்விப் படமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ளது.