காதல் தோல்வி இளைஞன் to ஊரைக் காக்கும் ஹீரோ… எப்படி இருக்கிறது ‘மதராஸி’?
அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள மதராஸி படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. கடந்த காலங்களில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் மதராஸி படம் அமைந்துள்ளது.
இந்த படத்தில் வித்யுத் ஜமால், பிஜு மேனன், ருக்மினி வசந்த் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இன்று வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன.
வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டில் துப்பாக்கிகளை அதிகளவில் பெருக்கி வன்முறையைத் தூண்டுவதற்காக ஒரு கும்பல் வருகிறது. அந்த கும்பலை போலீசாரால் தடுக்க முடியவில்லை. அதனால் காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயற்சிக்கும் கதாநாயகனைப் போலீஸ் பயன்படுத்துகிறது. துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலைக்கு தொழிலாளியாக சிவகார்த்திகேயன் உள்ளே வருகிறார். அதன் பின் நடக்கும் ஆக்ஷன் மசாலா ட்ராமாதான் மதராஸி. வழக்கமான துள்ளலானக் காமெடியை எல்லாம் ஓரம் வைத்துவிட்டு சீரியஸ் முகம் காட்டி நடித்துள்ளார் சிவா. ஆனால் காட்சிகள் எல்லாம் யூகிக்கும் படி இருப்பதுதான் திரைக்கதையின் பலவீனம்.