1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 25 ஜூன் 2025 (08:19 IST)

என்னுடைய எக்ஸ் தளக் கணக்கோடு உரையாடாதீர்கள்… ஸ்ருதிஹாசன் எச்சரிக்கை!

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை நடிகையாக அறிமுகப்படுத்தியது இந்தி சினிமாதான். கிக் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், அதன் பின்னர் தமிழில் ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்து ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது அவர் கைவசம் தமிழில் ‘ட்ரெய்ன்’ என்ற படம் மட்டுமே உள்ளது. அதிலும் அவர் ஒரு கௌரவ வேடத்திலேயே நடித்து வருகிறார். தெலுங்கில் அவரிடம் சலார் 2 உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் தன்னுடைய எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமான அவரது பதிவில் “ஹாய் நண்பர்களே, என்னுடைய ட்விட்டர் (எக்ஸ்) பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து வரும் பதிவுகள் நான் இடுபவை அல்ல. அதனால் நான் திரும்ப வரும் வரை அந்த பதிவுகளோடு உரையாடாதீர்கள்.” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக பிரபலங்களின் சமூகவலைதளப் பக்கங்கள் அதிகளவில் இதுபோல ஹேக் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.