1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 16 மே 2025 (11:04 IST)

தமிழ்நாட்டில் ‘ரெட்ரோ’ படத்தின் வசூலைக் கடந்த ‘டூரிஸ்ட் பேமிலி’.. தியேட்டர் அதிபர் பகிர்ந்த தகவல்!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றுன் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக கடந்த வாரம் ரிலீஸானது சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம். சிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படமும் ஒன்று. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு உருவாகி இருந்தது.

இதனால் படம் ரிலீஸான பின்னர் நாளுக்கு நாள் வசூலின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல் நாளில் 2 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த நிலையில் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் 2 கோடி ரூபாய்க்குக் குறையாமல் வசூலித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 40 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகவும், உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது இந்த திரைப்படம்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திரையரங்க அதிபர் திருச்சி ஸ்ரீதர் “டூரிஸ்ட் பேமிலி படத்தின் வசூல் தமிழ்நாட்டில் ‘ரெட்ரோ’ படத்தின் வசூலைக் கடந்துள்ளது” எனக் கூறியுள்ளார். இது டூரிஸ்ட் பேமிலி படத்தின் மிகப்பெரிய வெற்றியைக் காட்டியுள்ளது.