ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட பலர் நடித்துள்ள Thama படத்தின் டீசர் வெளியாகி பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியில் ஹாரர் காமெடி படங்களை தயாரித்து பெரும் ஹிட் கொடுத்து வரும் நிறுவனம் Maddock Films. இந்த நிறுவனம் தயாரித்த ’ஸ்ரீ’ படம் ஹிட் அடித்த நிலையில் அதன் இரண்டாவது பாகமான Sree 2 மொத்தமாக 700+ கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து பெடியா, ஸ்ரீ, முஞ்ச்யா என பல படங்களை இயக்கி அவற்றை ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸாக இணைத்துள்ளனர். இந்த வரிசையில் அடுத்து வரும் படம்தான் தமா. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குரானா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முந்தைய படங்களில் பேய், பிசாசுகள், ஓநாய் மனிதன் கதைக்களங்களை எடுத்தவர்கள் இதில் ட்ராகுலா வகை ரத்தக்காட்டேரியை மையமாக கொண்ட படமாக தயாரித்துள்ளனர். டீசரை பார்க்கும்போது இதில் ராஷ்மிகா ரத்தக்காட்டேரியாக நடித்திருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த டீசர் தற்போது வைரலாகியுள்ளது. Edit by Prasanth.K