திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (15:33 IST)

இந்தியா பாகிஸ்தான் போட்டி.. நேரில் பார்க்க அகமதாபாத் செல்லும் ரஜினிகாந்த்..!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அகமதாபாத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த் வரும் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க செல்லப் போகிறார்.

இதே போட்டியை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் அவர்களும் நேரில் பார்க்க அகமதாபாத் மைதானம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்துவிட்டு தமிழகம் திரும்பிய பின்னர் தலைவர் 170 படத்தின் அடுத்த கட்ட  படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva