செவ்வாய், 2 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 டிசம்பர் 2025 (11:13 IST)

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மீனா நடிப்பில், ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'எஜமான்'. இந்த படம் வெளியான 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 
ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் டிசம்பர் 12ஆம் தேதி 'எஜமான்' திரைப்படம் பிரமாண்டமான முறையில் மறு வெளியீடு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம், தற்போது டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட உள்ளது. எம்.என். நம்பியார், மனோரமா, விஜயகுமார், நெப்போலியன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 
 
மேலும், இளையராஜா இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்தின் மறு வெளியீடு, ரஜினி ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக அமையவுள்ளது.
 
Edited by Mahendran