செவ்வாய், 28 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (11:23 IST)

நீதிமன்றம் போய் தடை வாங்கியும் எந்த பயனும் இல்ல… முதல் நாளே இணையத்தில் வெளியான ‘கூலி’!

நீதிமன்றம் போய் தடை வாங்கியும் எந்த பயனும் இல்ல… முதல் நாளே இணையத்தில் வெளியான ‘கூலி’!
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக  இருந்த ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவான ‘கூலி’ படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு ‘பில்டப்’ கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் இன்று படம் வெளியான முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. புதிதாக எதுவும் இல்லாமல் மசாலா படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட் திரைக்கதை, கதாநாயக வழிபாடு என அரைத்த மாவையே லோகேஷ் அரைத்துள்ளார் என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில் கூலி திரைப்படம் நேற்றே இணையத்தில் பைரஸியாக வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் சென்று படத்தை இணையத்தில் வெளியிடத் தடை உத்தரவு பெற்றிருந்தது. ஆனாலும் முதல்நாளே படம் இணையத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.