திங்கள், 20 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (14:23 IST)

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

ப்ரதீப் ரங்கநாதன் நடித்து வெளியாகியுள்ள ட்யூட் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வசூலும் அதிகரித்துள்ளது.

 

லவ் டுடே, ட்ராகன் என தொடர்ந்து ஹிட் படங்களை அளித்து வரும் ப்ரதீப் ரங்கநாதன் நடித்து வெளியாகியுள்ள படம் ட்யூட். கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

 

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. வெளியான முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் ரூ22 கோடி வசூலித்தது. தொடர்ந்து தற்போதைய இரண்டு நாள் நிலவரப்படி, ட்யூட் படம் 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்று, நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்களுமே விடுமுறையாக உள்ளதால் ட்யூட் டிக்கெட் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன. முதல் வாரத்திலேயே ட்யூட் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K