1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 மே 2025 (13:07 IST)

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

hit 3

தெலுங்கு நடிகர் நானி நடித்து சமீபத்தில் வெளியான ஹிட் 3 திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

 

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான நானி, ஒவ்வொரு படத்திலும் சிறப்பான கதை தேர்வு, நடிப்பு என இறங்கி கலக்கி வருகிறார். நானி படம் என்றாலே நம்பி போகலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளதுடன், தெலுங்கை தாண்டி தமிழ் ரசிகர்களிடியேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள நானியின் ‘ஹிட் 3’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படம் மூன்றே நாட்களில் 83 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்றும் ஷோ ஹவுஸ்ஃபுல்லாகி வரும் நிலையில் நாளை இதன் வசூல் நிலவரம் 100 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth