விக்ரம்மின் அடுத்த படத்தில் மீனாட்சி சௌத்ரி?.. லேடட்ஸ்ட் தகவல்!
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீரன் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய முதல் படத்துக்கும் இரண்டாம் படத்துக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது.
இரண்டாவது படத்தில் அவர் சிவகார்த்திகேயன் என்ற மாஸ் ஹீரோவுக்காக சமாதானங்கள் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை மாவீரன் படத்தைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பாக அருண் விஷ்வா தயாரிக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் மே மாதமே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திரைக்கதைப் பணிகள் முடியாததால் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகி ஆக நடிக்க மீனாட்சி சௌத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.