1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2025 (18:49 IST)

பாரத நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் அறிவில்லாமல் உள்ளனர். ரஜினிகாந்த்

மொபைல் போன் யுகத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி சில பெரியவர்கள் கூட பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாசாரத்தின் அருமை பெரிமை தெரியாமல் அறிவில்லாமல் உள்ளனர்,'' என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
 
சென்னையில் லதா ரஜினிகாந்த் நடத்தும் பாரத சேவா என்ற  நிகழ்ச்சியில்  ரஜினி பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் அவர் பேசியதாவது:
 
மொபைல் போன் யுகத்தில் நமது இளைஞர்கள், சில பெரியவர்கள் பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாச்சாரம் அருமை பெருமை தெரியாமல் அறிவில்லாமல் உள்ளனர்.
 
தங்களது கலாச்சாரம் பாரம்பரியத்தில் நிம்மதி, சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவை நோக்கி வருகின்றனர். இங்கு தான் நிம்மதி, சந்தோஷம் கிடைக்கிறது என்கின்றனர்.
 
தியானம், யோகா, இயற்கையான வாழ்க்கையை நோக்கி வருகின்றனர். நமது கலாசாரம், அருமை பெருமைகளை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ரஜினி பேசி உள்ளார்.

Edited by Siva