1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 9 ஜூலை 2025 (08:37 IST)

காற்றடித்தால் காகமும் பறக்கும்.. காகிதமும் பறக்கும்.. கலைஞரின் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய மணிகண்டன்!

தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல் கலைஞர், எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனர் என பல துறைகளில் செயல்பட்டு வந்த மணிகண்டனை கதாநாயகனாக அடையாளப்படுத்திய படம் என்றால் அது குட்னைட் படம்தான். அந்த படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்று அனைவரையும் கவர்ந்தது.

ஜெய்பீம், குட்னைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக உருவாகி வருகிறார் மணிகண்டன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் பா ரஞ்சித் தயாரிப்பில் ‘மக்கள் காவலன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் மணிகண்டன் பேசியது கவனமீர்த்துள்ளது. அதில் “early success is a scam, Great things take time என்று நான் படித்துள்ளேன். அதையே கலைஞர் அய்யா தன்னுடைய கவிதை ஒன்றில் வேறு விதமாக எழுதியுள்ளார். காற்றடித்தால் காகமும் பறக்கும். காகிதமும் பறக்கும். காற்று நிற்கும் வரை பொறு. அப்போது பறக்கத் தெரியாதது நின்றுவிடும் என்று எழுதியிருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்தது” எனப் பேசியுள்ளார்.