மாளவிகா மோகனன் நடிக்கும் 3 திரைப்படங்கள்.. இன்று ஒரே நாளில் வெளியான 3 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்..!
இன்று நடிகை மாளவிகா மோகனன் தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் மூன்று திரைப்படங்களின் சிறப்புப் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாளவிகா மோகனன், தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த வரிசையில், அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படங்கள்:
'ஹிருதயப்பூர்வம்' (மலையாளம்)
'ராஜாசாப்' (தெலுங்கு)
'சர்தார் 2' (தமிழ்)
மேற்கண்ட இந்த மூன்று படங்களின் போஸ்டர்களும் மாளவிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இது அவரது ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பரிசாக அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் மூன்று மொழிப் படங்களில் நடித்து முடித்துள்ள மாளவிகாவின் திறமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Edited by Mahendran