திங்கள், 29 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (08:54 IST)

கென் கருணாஸ் இயக்கும் படத்துக்கு ஷங்கர் பட தலைப்பு?

கென் கருணாஸ் இயக்கும் படத்துக்கு ஷங்கர் பட தலைப்பு?
நடிகர் கருணாஸின் மகனான கென்-ஐ தன்னுடைய அசுரன் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகப்படுத்தி பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தார் இயக்குனர் வெற்றிமாறன். அதன் பின்னர் அவர் சில படங்களில் நடித்தாலும் மீண்டும் வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படம் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது.

மேலும் கென் கருணாஸ் வெற்றிமாறனோடு அதிக நேரம் செலவிட்டு அவருக்கு ஒரு உதவி இயக்குனர் போல பணியாற்றி வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது கென் ஒரு படத்தை இயக்கத் தயாராகியுள்ளார். இந்த படத்தைக் கருணாஸ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்துள்ளது. அதில் வெற்றிமாறன், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஜி வி பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீதேவி, அனிஷ்மா, மற்றும் ப்ரியன்ஷி யாதவ் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முழுக்க முழுக்க பள்ளியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்துக்கு ‘காதலன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  1993 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா உள்ளிட்டோர் நடிப்பில் ’காதலன்’ படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தகக்து. தற்போது அந்த தலைப்பை கென் கருணாஸ் தன் படத்துக்கு மீண்டும் வைத்துள்ளார்.