வியாழன், 27 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2025 (12:07 IST)

அவர் என் எல்லாமும்: இந்த வெற்றிடம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்: கணவர் தர்மேந்திரா குறித்து ஹேமாமாலினி!

அவர் என் எல்லாமும்: இந்த வெற்றிடம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்: கணவர் தர்மேந்திரா குறித்து ஹேமாமாலினி!
பாலிவுட் ஜாம்பவானும் நடிகருமான தர்மேந்திரா நவம்பர் 24 அன்று காலமானதை தொடர்ந்து, அவரது மனைவி ஹேமா மாலினி தனது X சமூக ஊடக பக்கத்தில் இன்று  உருக்கமான அஞ்சலியை செலுத்தினார். அவரது மறைவுக்கு பிறகு ஹேமா மாலினி வெளியிட்ட முதல் பதிவு இதுவாகும்.
 
"தரம் ஜி... அவர் எனக்கு அன்பான கணவர், பாசமிகு தந்தை, நண்பர், தத்துவஞானி, வழிகாட்டி, உண்மையில், அவர் எனக்கு எல்லாமே!" என்று ஹேமா மாலினி பதிவிட்டுள்ளார். அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்றும், பல வருடங்கள் இணைந்திருந்த நினைவுகளை மட்டுமே இனி அசைபோட முடியும் என்றும் அவர் உருக்கமாக தெரிவித்தார்.
 
மேலும், தர்மேந்திராவின் கலகலப்பான இயல்பு, அவரது பணிவு மற்றும் உலகளாவிய ஈர்ப்பு ஆகியவை அவரை தனித்துவமான அடையாளமாக நிலைநிறுத்தியது என்றும் ஹேமா மாலினி குறிப்பிட்டார். 
 
தர்மேந்திரா - ஹேமா மாலினி இருவரும் 1980-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவரது இறுதி சடங்குகளில் அமிதாப் பச்சன், ஷாருக் கான் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
 
Edited by Mahendran