1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 16 மே 2025 (13:20 IST)

தனுஷ், சிம்பு படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு ஒரே நேரத்தில் அதிகப் படங்கள் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது ‘Dawn Pictures’. இதன் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் தற்போது தனுஷின் நடிப்பில் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயன் நடிப்பில் “பராசக்தி’ மற்றும் சிம்பு 49 ஆகியப் படங்களைத் தயாரித்து வருகிறார். மேலும் பல பெரிய பட்ஜெட் படங்களை அவர் தயாரிக்க திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அதர்வா முரளியை வைத்து ‘இதயம் முரளி’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கியும் வருகிறார். இப்படி ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரித்து கோலிவுட்டையே ஆச்சர்யப்பட வைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை முதல் இவரது இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.