ஏன் ‘ராயன்’ பட வாய்ப்பை மறுத்தேன்… ஜி வி பிரகாஷ் பகிர்ந்த தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜி வி பிரகாஷ். இசையமைப்பாளராக 100 படங்களுக்கும் மேலும் நடிகராக 25 படங்களுக்கும் மேலும் நடித்துள்ளார்.
தற்போது அவர் நடிப்பில் நான்கு படங்கள் உருவாகியுள்ள நிலையில் தொடர்ந்து தனுஷ் மற்றும் சுதா கொங்கரா போன்றவர்களின் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். சமீபகாலமாக அவர் தனுஷுடன் அதிக நெருக்கமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷின் தம்பியாக ராயன் படத்தில் வந்த வாய்ப்பை ஏன் நிராகரித்தார் எனக் கூறியுள்ளார். அதில் “ராயன் படத்தில் அந்த கதாபாத்திரம் தனுஷின் முதுகில் குத்தும். அப்படி என் நண்பன் முதுகில் நான் குத்த விரும்பவில்லை. அது படமாக இருந்தாலும். வேறு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்திருபேன்” எனக் கூறியுள்ளார்.