வெள்ளி, 17 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2025 (09:53 IST)

நாய் பிரியர்கள் அதிருப்தி! இன்னைக்கு நீயா நானா எபிசோட் அவ்ளோதானா?

neeya naana

இன்றைய நீயா நானா நிகழ்ச்சியில் ‘நாய்க்கடி’ சம்பவங்கள் குறித்து விவாத நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் அதை ஒளிபரப்பக் கூடாது என நாய் பிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

 

நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தெரு நாய்களை அகற்ற வேண்டும், அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என ஒரு சாராரும், தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கூடாது என்று நாய் பிரியர்களும் பேசி வருகின்றனர். இதை மையப்படுத்தி இன்ற்உ விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் நடைபெறுகிறது.

 

ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைபட்சமாக நாய்களை அகற்ற வேண்டும் என்ற சாராருக்கு ஆதரவாக நிகழ்ச்சியின் போக்கு உள்ளதாக நாய் பிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்றும் குரல்கள் எழுந்துள்ளது. ஆனால் அவற்றை தாண்டி ஏற்கனவே இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுவிட்டது. அதனால் மதியம் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி டிவியிலும் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது,

 

Edit by Prasanth.K