ஹீரோவாக அறிமுகம் ஆகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.
தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்து விட்டு கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் அமீர்கான், சூர்யா, கமல்ஹாசன் ஆகியோரோடு இணைந்து அடுத்தடுத்து படங்கள் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஒரு முன்னணி இயக்குனர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.