நடிகராக அவதாரம் எடுக்கும் 'டுரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனர் அபிஷந்த் ஜிவிந்த்.. இன்னொரு பிரதீப் ரங்கநாதன்?  
                                       
                  
                  				  
	தமிழ் சினிமாவில் 'டுரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தின் இயக்குநரான அபிஷந்த் ஜிவிந்த் இப்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
				    											
  																												
									  
	 
	கடந்த 18 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அவரது நடிப்பு திறமையை பார்த்த படக்குழுவினர் வியந்து போயுள்ளனர். தனது முதல் படத்திலேயே பிரதீப் ரங்கநாதன் எப்படி பெரிய வெற்றியை பெற்றாரோ, அதேபோல அபிஷந்தும் இந்த படத்தின் மூலம் பெரிய அளவில் புகழ் பெறுவார் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
				  				  
	 
	தமிழ் சினிமாவில் தற்போது இளம் கதாநாயகர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. பிரதீப் ரங்கநாதன் போன்ற நடிகர்கள் ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில், காதல் கதைகளுக்கு ஏற்ற புதிய முகங்கள் தேவைப்படுகின்றன. 
				  																		
						 
							
 
							 
						
						
																								
									  
	 
	இந்தச் சூழலில், அபிஷந்த் ஜிவிந்தாவின் வருகை ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மூலம் அவர் நிச்சயம் ஒரு வெற்றி நாயகனாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
				  																		 
											
									  
	 
	Edited by Siva