1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 மே 2025 (14:32 IST)

20 கோடி சம்பளம்.. 8 மணி நேரம் தான் வேலை.. லாபத்தில் பங்கு.. தீபிகாவை நீக்கிய இயக்குனர்..!

பிரபாஸ் நடிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட பான்-வேர்ல்ட் படமான ‘ஸ்பிரிட்’ குறித்து ஒரு அதிர்ச்சி செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகை தீபிகா படுகோனே இடையே பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இதன் காரணமாக  தீபிகா ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இன்னும் சில ஊடகஙக்ள் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தான் தீபிகாவை படத்தில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.
 
தினமும் 8 மணி நேரம் தான் வேலை செய்வேன்,  படத்தில் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் , படத்தின் லாபத்தில் பங்கு, தெலுங்கில் வசனங்கள் பேச மறுப்பு போன்ற நிபந்தனைகளை தீபிகா விதித்ததாகவும், இதனால் அதிருப்தி அடைந்த இயக்குனர் அவரை படத்தில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது, புதிய நாயகியை தேடும் பணி நடக்கிறது.
 
 
Edited by Mahendran