கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி
உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் இயக்குனர்களில் முக்கியமானவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய டார்க் நைட் ட்ரைலாஜி, இன்செப்ஷன், இண்டெஸ்டெல்லார் உள்ளிட்ட படங்களுக்கு தமிழகத்திலுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது முதன்முறையாக வரலாற்று இதிகாச படத்தை இயக்குகிறார் நோலன். இதில் மேட் டேமன் கதாநாயகனாக நடிக்கிறார்.
ஹாலிவுட்டில் பெரும்பாலும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் நிலையில், நோலன் அதற்கு முற்றிலும் நேரெதிரானவர். அவருக்கு கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்துவது பிடிக்காது என்பதால் அவர் படங்களில் பல காட்சிகளை ஒரிஜினலாகவே படமாக்குவார்.
இந்நிலையில் இந்த படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நோலன் நிறைய நிர்வாணக் காட்சிகளைப் படமாக்கியுள்ளதால் இதற்கு R சான்றிதழ்தான் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தை உலகம் முழுவதும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க முடியாது.