ஒன்பதாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியைக் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விதம் சிலாகிக்கப்பட்டது. ஆனால் கடந்த சீசனில் தன்னுடைய சினிமா மற்றும் அரசியல் பணிகள் காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
அவருக்குப் பதில் விஜய் சேதுபதி கடந்த சீசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆனால் கமல் அளவுக்கு அவரால் நிகழ்ச்சியை சிறப்பாகக் கொண்டு செல்ல முடியவில்லை என விமர்சனம் எழுந்தது. இதனால் அடுத்த சிசனில் அவர் தொடரமாட்டார் எனவும் சொல்லப்பட்டது.
ஆனால் ஒன்பதாவது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார். இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் ரிலீஸான நிலையில் தற்போது தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.