1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 மே 2025 (12:19 IST)

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்துக்கு இரண்டு டைட்டில்கள் பரிசீலணை!

தமிழில் அடுத்தடுத்து விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த அட்லி பாலிவுட் சென்று ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கதாநாயகிகளாக தீபிகா படுகோன், மிருனாள் தாக்கூர், ஜான்வி கபூர் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் தலைப்புக் குறித்த தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படத்துக்கு ‘ஐகான்’ மற்றும் ‘சூப்பர் ஹீரோ’ ஆகிய இரண்டு தலைப்புகளை அட்லி பரிசீலித்து வருவதாகவும் இரண்டில் ஒன்றை அவர் இறுதி செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.