துருவ் விக்ரம்மின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான்!
நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் ஆதித்யா வர்மா மற்றும் மகான் ஆகிய இரு படங்களில் நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றார். ஆனால் அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட்டடிக்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்காமல் துருவ் மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் இப்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் –காளமாடன்” என்ற படத்தில் கபடி வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில் துருவ் விக்ரம் அடுத்து தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கான பணிகள் சமீபத்தில் விக்ரம் வீட்டில் எளிமையாக நடந்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கெட்டிகா ஷர்மா ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.