முதலமைச்சர், துணை முதல்வருக்கு நன்றி சொன்ன அனிருத்.. என்ன காரணம்?
பிரபல இசையமைப்பாளர் அனிருத்துக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் அனிருத் தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: "மதிப்புமிக்க கலைமாமணி விருதை நான் மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு, மதிப்பிற்குரிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் இயல் இசை நாடக மன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
"எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், எனது முழு இசைக் குழுவினர், அதைவிட முக்கியமாக எப்போதும் அன்பும் ஆதரவும் அளித்து வரும் எனது இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது" என்று அனிருத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Edited by Mahendran