ரோட்டில் போகும் நாயை காப்பாற்றுங்கள், ஆனால் மனிதனை காப்பாற்றாதீர்கள்.. அமீர்-பாவனி குறித்து பிரபலம்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐசுவின் தந்தை, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "நீங்கள் ரோட்டில் ஒரு நாய் ஆபத்தான நிலையில் இருந்தால் காப்பாற்றுங்கள். அதைப் வீட்டில் கொண்டு போய் வைத்து கூட வளர்த்து விடுங்கள், பரவாயில்லை. ஆனால் அதே இடத்தில் ஒரு மனிதன் இருந்தால், கண்டுகொள்ளாமல் சென்று விடுங்கள். இது எனது வாழ்க்கையில் நடந்த அனுபவம்," என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, நடிகை பாவனியை திருமணம் செய்து கொண்ட அமீர், பிக்பாஸ் ஐசுவின் குடும்பத்தினர் ஆதரவினால் தான் வளர்ந்தார் என்பதும், ஐசுவின் அப்பா அவருக்கு பல உதவிகள் செய்திருந்தார் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தான் தெரியவந்தது. ஆனால், நேற்று அமீர் - பாவனியின் திருமணம் நடந்தபோது, அதில் ஐசுவின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
அமீரின் சகோதரி போல் இருந்து, இந்த திருமணத்தை கிட்டத்தட்ட நடத்தி வைத்ததே பிரியங்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், ஐசுவின் அப்பா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "நீங்கள் ரோட்டில் போகும்போது நாய் ஒன்று ஆபத்தான நிலையில் இருந்தால், அதை காப்பாற்றுங்கள். அதை பேணி பாதுகாத்து, வீட்டில் கூட வளர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அதே இடத்தில் ஒரு மனிதன் இருந்தால், கண்டுகொள்ளாமல் சென்று விடுங்கள். அந்த மனிதனை வீட்டிற்கு கூட்டிச் சென்று கவனிக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்," என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு, அமீரை தான் மறைமுகமாக குறிக்கிறது என கூறப்படுகிறது.
Edited by Mahendran